பிரபல மலையாள இயக்குனர் மரணம்

திருவனந்தபுரம்: மலையாள சினிமாவில் பழம்பெரும் இயக்குனர்களில் குறிப்பிடத்தக்கவர் கே.ஜி.ஜார்ஜ் (78). பஞ்சவடிப்பாலம், இரகள், யவனிகா, ஆதாமின்டெ வாரியெல்லு உள்பட 20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக 1998ல் வெளியான இலவங்கோடு தேசம் என்ற படத்தை இயக்கினார். அவரது மனைவி சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

இதனால் கே.ஜி. ஜார்ஜ் கொச்சியில் உள்ள ஒரு முதியோர் காப்பகத்தில் வசித்து வந்தார். இந்தநிலையில் நேற்று காலை அங்கு ேக.ஜி.ஜார்ஜ் திடீரென மரணமடைந்தார். கே.ஜி. ஜார்ஜின் மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்பட பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

The post பிரபல மலையாள இயக்குனர் மரணம் appeared first on Dinakaran.

Related Stories: