‘அனைத்து தொழிலாளர்களின் நலனிலும் கவனம் செலுத்த ஒன்றிய முனைந்துள்ளது. எல்லைச்சாலை அமைப்பு திட்டப்பணிகளில் என்ஜினியர் நிலையில் உள்ள அதிகாரிகள் இறந்தால் மட்டுமே அவர்களது உடல் அரசு செலவில் அவர்களது ஊருக்கு அனுப்பப்பட்டது.
இனிமேல் அந்த சலுகை சாலைப்பணி தொழிலாளர்களுக்கும் அளிக்கப்படும். சிரமமான தட்ப வெப்பம், மேடுபள்ளங்களில் அவர்கள் ஆற்றும் பணி, ராணுவ வீரர்களின் கடமைக்கு சமமானது. அதனால் அவர்களது சிரமத்தை போக்க இச்சலுகை அளிக்கப்படுகிறது. அவர்கள் இறுச்சடங்கு நிதியுதவி ரூ.10ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
The post எல்லைச்சாலை திட்ட தொழிலாளர் இறந்தால் அரசு செலவில் ஊருக்கு உடல் அனுப்பப்படும் – ராஜ்நாத் சிங் appeared first on Dinakaran.