ராணுவ அதிகாரிகளுக்கு ரூ.400 கோடி நிலுவை விடுவிப்பு

புதுடெல்லி: இந்திய ராணுவத்தின் இளைய அதிகாரிகள் உள்பட பலருக்கு நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக பாதுகாப்பு கணக்குகளின் கட்டுப்பாட்டாளர் இயக்குநர் அலுவலகம் நடவடிக்கை மேற்கொண்டது.

அதன்படி இளநிலை ராணுவ அதிகாரிகள் உள்பட பல்வேறு ரேங்க்குகளில் உள்ள அதிகாரிகளுக்கான வீட்டு வாடகை, சம்பள நிர்ணய வழக்குகள் மற்றும் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கான கல்வி செலவினங்கள் தொடர்பான பணம் தரப்படாமல் இருந்தது. இதுதொடர்பாக நாடு முழுவதும் நிலுவையில் இருந்த ரூ.400 கோடி விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ராணுவ அதிகாரிகளுக்கு ரூ.400 கோடி நிலுவை விடுவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: