நிலக்கரி வரி விதிப்பு முறைகேடு வழக்கு சட்டீஸ்கர் காங். எம்எல்ஏக்கள் உள்பட 9 பேருக்கு சிறப்பு நீதிமன்றம் நோட்டீஸ்

ராய்பூர்: சட்டீஸ்கரில் நிலக்கரி வரி விதிப்பு முறைகேடு வழக்கை அமலாக்கத்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் காங்கிரசை சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் தேவேந்திரசிங் யாதவ், சந்திரதேவ் பிரசாத் ராய், ஐஏஎஸ் பெண் அதிகாரி ராணு சாஹு உள்ளிட்ட 11 பேர் அடங்கிய இரண்டாவது குற்றப்பத்திரிகை கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இவர்களில் ராணு சாஹு, நிகிர் சந்திரகர் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து சிறப்பு நீதிமன்றம் நேற்று முன்தினம் 2வது துணை குற்றப்பத்திரிகையை பதிவு செய்தது. அதன்படி, தேவேந்திரசிங் யாதவ், சந்திரதேவ் பிரசாத் ராய், காங்கிரஸ் தலைவர்கள் ஆர்.பி.சிங் மற்றும் விநோத் திவாரி உள்பட 9 பேரும் அக்டோபர் 25ம் தேதிக்குள் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என சிறப்பு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஆஜராத தவறினால் ஜாமீனில் வௌிவரக்கூடிய அல்லது வௌிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

The post நிலக்கரி வரி விதிப்பு முறைகேடு வழக்கு சட்டீஸ்கர் காங். எம்எல்ஏக்கள் உள்பட 9 பேருக்கு சிறப்பு நீதிமன்றம் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Related Stories: