மாநிலங்களவை பார்வையாளர் மாடத்தில் இருந்து அரசியல் கோஷம்: உடனே நடவடிக்கை எடுக்க காங். கோரிக்கை

புதுடெல்லி: மாநிலங்களவை பார்வையாளர் மாடத்தில் அரசியல் கோஷம் எழுப்பியவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்கும்படி மாநிலங்களவை தலைவருக்கு காங்கிரஸ் எம்பி கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கருக்கு காங்கிரஸ் எம்பி ஜெய்ராம் ரமேஷ் நேற்று எழுதியுள்ள கடிதத்தில், கடந்த 21ம் தேதி மாநிலங்களவை பார்வையாளர் மாடத்தில் அமர்ந்திருந்த 50க்கும் மேற்பட்டோர் அரசியல் கோஷங்களை எழுப்பினர்.

இது அவையில் பரபரப்பை ஏற்படுத்தியதோடு அவையின் மாண்பை காக்கும் விதிகளை பற்றி கடும் கேள்விகளை எழுப்பி உள்ளது. அவையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி மாநிலங்களவை நடத்தை விதிகள் எண் 264ல் கூறப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் அரசியல் கோஷங்களை எழுப்பியதையடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இந்த விஷயம் குறித்து தீவிரமாக விசாரித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்’’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post மாநிலங்களவை பார்வையாளர் மாடத்தில் இருந்து அரசியல் கோஷம்: உடனே நடவடிக்கை எடுக்க காங். கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: