தண்டனையை விட நீதி வழங்க தான் புதிய சட்டங்கள் கொண்டுவரப்படுகிறது: ஒன்றிய உள்துறை அமைச்சர் விளக்கம்

புதுடெல்லி: தண்டனையை விட நீதி வழங்குவதற்காகவே 3 புதிய குற்றவியல் சட்டங்கள் கொண்டுவரப்படுகிறது என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிய சட்டங்களுக்கு பதிலாக முறையே பாரதிய நியாய சன்ஹிதா(பிஎன்எஸ்-2023), பாரதிய நாகரீக் சுரக்‌ஷா சன்ஹிதா(பிஎன்எஸ்எஸ்-2023),பாரதிய சாக்‌ஷிய சன்ஹிதா(பிஎஸ்ஏ-2023) சட்டங்களை கொண்டுவர நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லியில் நேற்று நடந்த சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாட்டில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில்,‘‘ இந்திய குற்றவியல் நீதி அமைப்பு காலனித்துவ ஆதிக்கத்தின் அணுகுமுறைகளை கொண்டிருந்தது. ஆனால், மூன்று புதிதாக தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்கள் இந்திய மண்ணின் வாசனையை கொண்டுள்ளன. முன்மொழியப்பட்டுள்ள மசோதாக்கள் அரசியலமைப்பு, மனித உரிமை மற்றும் தனிநபர்களின் உரிமைகளை பாதுகாப்பதை மையப்புள்ளியாக கொண்டிருக்கும்.

தற்போதைய தேவைகளை கருத்தில் கொண்டு குற்றவியல் சட்டங்கள் ஒட்டுமொத்தமாக மாற்றப்படுகிறது. தண்டனை வழங்குவதை விட நீதி வழங்குவது என்பதை அணுகுமுறையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.புதிய மசோதாக்கள் குறித்து நாடுமுழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் தங்கள் பரிந்துரைகளை ஒன்றிய உள்துறை செயலாளருக்கு அனுப்பலாம். இதை சட்டமாக்குவதற்கு முன் வழக்கறிஞர்களின் பரிந்துரைகள் நிச்சயமாக பரிசீலிக்கப்படும்’’ என்றார்.

The post தண்டனையை விட நீதி வழங்க தான் புதிய சட்டங்கள் கொண்டுவரப்படுகிறது: ஒன்றிய உள்துறை அமைச்சர் விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: