விநாயகர் சதுர்த்தி விழாவில் குத்தாட்ட பாடலை பாடியதால் நடிகையை நோக்கி பறந்த நாற்காலிகள்: போலீஸ் தடியடியால் ரசிகர்கள் ஓட்டம்

ஜான்பூர்: உத்தரபிரதேசத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவில், குத்தாட்ட பாடலை பாடி ஆடியதால் நடிகையை நோக்கி சிலர் நாற்காலிகளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூரில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சிக்கு போஜ்புரி நடிகை அக்ஷரா சிங் அழைக்கப்பட்டார். இந்நிலையில் கலை நிகழ்ச்சியின் போது சினிமா பாடல் ஒன்றை பாடிக்கொண்டே, அக்ஷரா சிங் குத்தாட்டம் போட்டார். அவரது ஆடல் பாடலை பார்த்தும், கேட்டும் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். ெதாடர்ந்து இரண்டு பாடல்களை பாடி அக்ஷரா சிங் ஆட்டம் போட்டார்.

ஆனால் அவர் மூன்றாவது பாடலைப் பாடும்போது கூட்டத்தில் திடீர் சலசலப்பு ஏற்பட்டது. கோயில் நிகழ்ச்சியில் ெதாடர்ந்து ஆபாசமான பாடல்களை பாடுவதா? என்று சிலர் எதிர்ப்பு கிளப்பினர். மேலும் பாடலுக்கு ஆதரவாகவும் எதிராகவும் குரல்கள் எழும்பியதால், நாற்காலிகளை தூக்கி மேடையை நோக்கி சிலர் வீசினர். திடீர் பதற்றம் ஏற்பட்டதால் போலீசார் சம்பவ இடத்தில் குவிந்தனர். இருந்தும் நிலைமை கட்டுக்குள் வராததைக் கண்ட அக்ஷரா சிங், மேடையை விட்டு வெளியேறுவது நல்லது என்று நினைத்தார்.

மேலும் தனக்கு பாதுகாப்பின்மையை உணர்ந்த அவர், உடனடியாக மேடையை விட்டு வெளியேறினார். போலீசாரின் லேசான தடியடியால் சிறிது நேரத்திற்கு பின் நிலைமை கட்டுக்குள் வந்தது. இருந்தும் அன்றைய நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இவ்விகாரத்தில் போலீசார் தலையிட்டு, மீண்டும் ஒருநாள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய அனுமதி அளித்தனர். அதையடுத்து அடுத்த நாள் நடத்தப்பட்ட கலை நிகழ்ச்சியில் அக்ஷரா சிங் கலந்து கொண்டு பக்தி பாடல் பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post விநாயகர் சதுர்த்தி விழாவில் குத்தாட்ட பாடலை பாடியதால் நடிகையை நோக்கி பறந்த நாற்காலிகள்: போலீஸ் தடியடியால் ரசிகர்கள் ஓட்டம் appeared first on Dinakaran.

Related Stories: