வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

மேட்டூர், செப்.24: மேட்டூர் அருகே உள்ள கோவிந்தபாடியில் கலைஞரின் வருமுன் காப்போம் சமருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கொளத்தூர் ஒன்றியக்குழு தலைவர் புவனேஸ்வரி சரவணன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் மாரப்பன், பஞ்சாயத்து தலைவர் பிரியதர்ஷினி ரங்கசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் விமலா, சத்யா நகர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் லாவண்யா ஆகியோரது தலைமையிலான குழுவினர் பரிசோதனை செய்தனர். பொது மருத்துவம், கண் மருத்துவம், குழந்தைகள் நலம் மற்றும் தடுப்பூசி பிரிவு, மகப்பேறு மருத்துவம், ஸ்கேன், கர்ப்பப்பை புற்றுநோய், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பிரிவு உள்ளிட்ட அனைத்து வகை மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டது. கொளத்தூர் மற்றும் சுற்றப்புற பகுதியைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்று பயனடைந்தனர். நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் சசிகுமார், ஊராட்சி உறுப்பினர் சாந்தி, தமிழைத் தேடி மாவட்டத் தலைவர் முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post வருமுன் காப்போம் மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Related Stories: