தண்டராம்பட்டு அருகே இருபிரிவு பிரச்னையால் 8 மாதங்களாக பூட்டியிருந்த கோயில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திறப்பு பக்தர்கள் வழிபட அனுமதி

தண்டராம்பட்டு, செப்.24: தண்டராம்பட்டு அருகே 8 மாதங்களுக்கு முன்பு பூட்டி சீல் வைக்கப்பட்ட முத்துமாரியம்மன் கோயில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபட அனுமதிக்ப்பட்டது.  திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தென்முடியனூர் ஊராட்சியில் 12 சமூகத்தை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். தென்முடியனூரில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பொதுமக்கள் தை மாதத்தில் பொங்கல் வைத்து வழிபட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக தென்முடியனூர் பகுதியை சேர்ந்த சில சமூகத்தினர், பட்டியலினத்தவர்களை கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கக்கூடாது என கூறி வந்தனர். இதனால் இருதரப்பு மக்களுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் வழக்கம்போல் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

முன்னதாக பட்டியலினத்தவர்கள் திருவண்ணாமலை கலெக்டர் பா.முருகேஷிடம் தங்கள் இனத்தை சேர்ந்தவர்களையும் முத்துமாரியம்மன் கோயில் தை திருவிழாவில் கோயிலுக்குள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என மனு அளித்தனர். அதனடிப்படையில், ஜனவரி 30ம் ேததி தை திருவிழாவில் கலெக்டர் மற்றும் எஸ்பி கார்த்திகேயன், இந்து சமய அறநிலைத்துறை ஆய்வாளர் நடராஜன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பட்டியலினத்தவர்களை கோயிலுக்குள் அனுமதித்து, சுவாமிக்கு பொங்கல் வைத்து தரிசனம் செய்ய வைக்கப்பட்டது. திருவிழா முடிவடைந்த பிறகு கோயில் மூடப்பட்டு ‘சீல்’ ைவக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் இரவு பகலாக பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டனர். இந்நிலையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கடந்த 20ம் தேதி முத்து மாரியம்மன் கோயில் திறந்து பொதுமக்கள் வழிபாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

The post தண்டராம்பட்டு அருகே இருபிரிவு பிரச்னையால் 8 மாதங்களாக பூட்டியிருந்த கோயில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திறப்பு பக்தர்கள் வழிபட அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: