கொசுப்புழுக்கள் இருந்தால் 5 ஆயிரம் அபராதம்

பருவமழையால் ஏற்படும் டெங்கு, மலேரியா, மூளைக்காய்ச்சல் உள்ளிட்டவைகளை கட்டுப்படுத்த, நகராட்சி மூலம் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் வீடுகள், வணிக நிறுவனங்களில் தண்ணீரை மூடி வைக்க வேண்டும். சுற்றுப்புறங்களில் மழை நீர் தேங்காத வகையில், கழிவுகளை அகற்றி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என நகராட்சி ஆணையாளர் சரவணன் கேட்டு கொண்டுள்ளார். வீடுகளில் கொசுப்புழுக்கள் கண்டறியப்பட்டால், 500 ரூபாயும், வணிக நிறுவனங்களில் கண்டறியப்பட்டால் ₹5 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

The post கொசுப்புழுக்கள் இருந்தால் 5 ஆயிரம் அபராதம் appeared first on Dinakaran.

Related Stories: