புளியந்தோப்பு பகுதியில் ரூ.1.81 கோடி மதிப்பீட்டில் கால்பந்தாட்ட மைதானம் நவீன உடற்பயிற்சி கூடம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

 

பெரம்பூர்: புளியந்தோப்பு பகுதியில் ரூ.1.81 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட நவீன கால்பந்தாட்ட மைதானம் மற்றும் உடற்பயிற்சி கூடத்தை விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். எழும்பூர் தொகுதிக்கு உட்பட்ட கே.பி.பார்க் பகுதியில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில், கால்பந்தாட்ட மைதானம் வேண்டும் என சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

அதன்பேரில், அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், ரூ.1.31 கோடி மதிப்பீட்டில், நவீன கால்பந்தாட்ட மைதானம் அமைக்கப்பட்டது. இதற்கான பணிகள் நிறைவு பெற்று, அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு கால்பந்தாட்ட மைதானத்தை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். மேலும் அதே பகுதியில், எழும்பூர் எம்எல்ஏ பரந்தாமன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட நவீன உடற்பயிற்சி கூடத்தையும் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, தா.மோ.அன்பரசன், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ரவிச்சந்திரன், பகுதி செயலாளர் வேலு, மாமன்ற உறுப்பினர்கள் ராஜேஸ்வரி ஸ்ரீதர், பரிதி இளம் சுருதி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post புளியந்தோப்பு பகுதியில் ரூ.1.81 கோடி மதிப்பீட்டில் கால்பந்தாட்ட மைதானம் நவீன உடற்பயிற்சி கூடம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: