ஜெய்ப்பூர்: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று காலை ராஜஸ்தான் சென்றார். ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போது அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்தநிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஒரு நாள் பயணமாக இன்று காலை ராஜஸ்தான் சென்றார். ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் முதல்வர் அசோக் கெலாட், மாநில காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் சுக்ஜிந்தர் ரந்தாவா ஆகியோர் ராகுலை வரவேற்றனர்.
தொடர்ந்து கட்சியின் மண்டல அலுவலகத்திற்கான, புதிய கட்டிடம் கட்டுவதற்கு ராகுல்காந்தி அடிக்கல் நாட்டுகிறார். இவ்விழாவில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும் கலந்துகொள்கிறார். பின்னர் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் ராகுல்காந்தி கலந்து கொண்டு பேசுகிறார். விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தற்போது ராகுலின் வருகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
The post பேரவை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் ராஜஸ்தானில் ராகுல் சுற்றுப்பயணம்: கட்சி அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார் appeared first on Dinakaran.
