ஏரிகளில் வளர்ந்த சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி தாசில்தார் தொடங்கி வைத்தார் அணைக்கட்டு தாலுகாவில்

அணைக்கட்டு, செப்.23: அணைக்கட்டு தாலுகாவில் உள்ள ஏரிகளில் வளர்ந்த சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணியை தாசில்தார் தொடங்கி வைத்தார். அணைக்கட்டு தாலுகா ஊசூர் அடுத்த பூதூர் ஊராட்சியில் பெரிய ஏரி, ஆண்டி ஏரி ஆகிய 2 ஏரிகளில் அதிகளவில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்துள்ளது. ஏரிகளில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணியை கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் அமைப்பு மூலம் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தொடங்கி வைத்தார். இந்நிலையில், பூதூர் ஊராட்சியில் உள்ள 2 ஏரிகளில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி நேற்று நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் கவிதா சிவகுமார் தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிவகுமார், ஆர்ஐ ஜெயந்தி, விஏஓ தங்கமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாசில்தார் வேண்டா பங்கேற்று பூஜை போட்டு ஹிட்டாச்சி இயந்திரம் மூலம் அகற்றும் பணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, இயந்திரம் மூலம் கருவேல மரங்கள் அகற்றும் பணி நடந்து வருகிறது. இதுகுறித்து அலுவலர்கள் கூறுகையில், ‘கலெக்டர் உத்தரவின்படி தனியார் அமைப்பு மூலம் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி தொடங்கியது. இப்பணிகள் ஒரு மாதம் அல்லது 2 மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அகற்றப்பட்ட இந்த ஏரியில் மரக்கன்றுகள் நடும் பணியும் நடக்க உள்ளது’ என்றனர்.

The post ஏரிகளில் வளர்ந்த சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி தாசில்தார் தொடங்கி வைத்தார் அணைக்கட்டு தாலுகாவில் appeared first on Dinakaran.

Related Stories: