ஒடுகத்தூர், செப்.23: புரட்டாசி மாதம் என்பதால் வரத்து குறைவால் ₹9 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது. ஒடுகத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வியாபாரிகள் வாரம் தோறும் வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும் சந்தைக்கு தங்களின் ஆடுகளை விற்கவோ, வாங்கவோ இங்கு கூடுகின்றனர். அதுமட்டுமின்றி, வெளியூர், வெளி மாவட்டங்களில் இருந்தும் கூட ஆடுகளை வாங்கவும், விற்கவும் வருவார்கள். வழக்கம்போல், நேற்று ஆட்டு சந்தை கூடியது. ஆனால், புரட்டாசி மாதம் என்பதால் ஆடுகள் வரத்து குறைவாகவே இருந்தது. சொற்ப எண்ணிகையில் மட்டுமே ஆடுகள் கொண்டுவரப்பட்டது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘வாரம் தோறும் வெள்ளிக்கிழமை ஒடுகத்தூர் பகுதியில் நடக்கும் ஆட்டு சந்தையில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆடுகளை கொண்டு வந்து வியாபாரம் செய்கின்றனர். ஆனால், புரட்டாசி மாதம் தொடங்கி விட்டதால் இம்மாதம் முடியும் வரை ஆடுகளின் வரத்து சற்று குறைவாகவே இருக்கும். சில சமயங்களில் சந்தை கூட நடக்காமல் போகும். நேற்று நடந்த சந்தையில் ₹9 லட்சத்திற்கு குறைவாகவே ஆடுகள் வியாபாரம் செய்யப்பட்டது’ என்றனர்.
The post வரத்து குறைவால் ₹9 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை புரட்டாசி மாதம் என்பதால் appeared first on Dinakaran.