வேகமாக பரவும் மெட்ராஸ் ஐ

சேந்தமங்கலம், செப்.23: புதுச்சத்திரம், சேந்தமங்கலம் வட்டார பகுதிகளில் மெட்ராஸ் ஐ தொற்று வேகமாக பரவி வருகிறது. சேந்தமங்கலம் பேரூராட்சி புதுச்சத்திரம் வட்டார பகுதியான புதன்சந்தை உள்ளிட்ட பகுதிகளில், மெட்ராஸ் ஐ தொற்று நோய், கடந்த ஒரு வாரமாக வேகமாக பரவி வருகிறது. கண் எரிச்சல், கண் சிவந்து காணப்படுதல், கண்ணில் நீர் சுரந்து கொண்டே இருத்தல், இமைகள் ஒட்டிக் கொள்ளுதல் உள்ளிட்டவை மெட்ராஸ் ஐ பாதிப்புக்கான முக்கிய அறிகுறிகள் ஆகும்.

இதுகுறித்து கண் மருத்துவர் கூறுகையில், ‘மெட்ராஸ் ஐ வந்துவிட்டால் வீட்டில் ஓய்வெடுக்க வேண்டும். பாதிப்பு அதிகமானால் உடனே மருத்துவரை சந்தித்து, சிகிச்சை பெறுவது அவசியம்.பாதிக்கப்பட்டவர்கள் தனியாக கைக்குட்டை வைத்து, கண்ணில் இருந்து வடியும் நீரை துடைக்க வேண்டும். கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கண்ணை விரலால் அழுத்தக் கூடாது. இரண்டு அல்லது மூன்று நாட்களில் தானாக சரியாகி விடும். சேந்தமங்கலம், புதுச்சத்திரம் வட்டார பகுதியில் உள்ள பேரூராட்சி அலுவலகங்கள், ேரஷன் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் இடையே மெட்ராஸ் ஐ பாதிப்பு அதிகளவில் பரவி விடுகிறது. நோய் தொற்று ஏற்பட்டவர்கள், கருப்பு கண்ணாடி அணிந்து வெளியே வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post வேகமாக பரவும் மெட்ராஸ் ஐ appeared first on Dinakaran.

Related Stories: