உச்சநீதிமன்ற உத்திரவை கர்நாடகா அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: உச்சநீதி மன்றம் உத்திரவை கர்நாடகா அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். காவிரி பங்கீடு விவகாரத்தில் ஒழுங்காற்று குழு மற்றும் நீர் மேலாண்மை ஆணையம் ஆகியவை பிறப்பித்த உத்தரவை கர்நாடகா அரசு அமல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. இதன்படி, தமிழ்நாட்டிற்கு விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

இந்நிலையில் உச்சநீதி மன்றம் உத்திரவை கர்நாடகா அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் அளித்த பரிந்துரையை கர்நாடகா அரசு நிறைவேற்ற வேண்டும், இதில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது என்று தீர்ப்பு அளித்துள்ளது வரவேற்க தக்கது. தமிழகத்தில் வாடிய பயிர்கள், தற்பொழுது கருகிகொண்டு இருக்கிறது. தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது.

இனிமேலும் கர்நாடகா அரசு தாமதம் செய்யாமல் காவிரி ஒழுங்காற்று குழு வின் உத்தரவையும், உச்சநீதி மன்ற தீர்ப்பையும் மதித்து, கூட்டாச்சி தத்துவத்திற்கு எடுத்துக்காட்டாக தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய தண்ணீரை முறையாக திறந்துவிட வேண்டும். தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post உச்சநீதிமன்ற உத்திரவை கர்நாடகா அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: