இந்திய, சீன எல்லை பிரச்னை பற்றி விவாதிக்க தயார்: ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் பதில்

புதுடெல்லி: இந்திய, சீன எல்லை பிரச்னை பற்றி மக்களவையில் விவாதிக்க தயார் என ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். சீனா அண்மையில் வௌியிட்ட சீன தேச வரைபடத்தில் 1962ம் ஆண்டு நடந்த போரில் சீனா ஆக்கிரமித்த இந்திய பகுதிகளையும், அருணாச்சலபிரதேசத்தின் பெரும் பகுதிகளையும் தங்கள் நாட்டின் பகுதியாக இணைத்திருந்தது. இந்நிலையில் நேற்று மக்களவையில் சந்திரயான்-3 வெற்றி மற்றும் விண்வௌி துறையில் இந்தியாவின் சாதனைகள் குறித்த விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாட்டின் எல்லைகளை பாதுகாப்பதில் அறிவியல் பங்கு குறித்து பேசினார். அப்போது குறுக்கிட்ட காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, இந்திய, சீன எல்லை பிரச்னை பற்றி விவாதிக்க தைரியம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய ராஜ்நாத் சிங், “இந்திய, சீன எல்லை பிரச்னை குறித்து விவாதிக்க எனக்கு முழு தைரியம் உள்ளது. அதைப்பற்றி விவாதிக்க நான் தயாராக உள்ளேன்” என்று தெரிவித்தார்.

The post இந்திய, சீன எல்லை பிரச்னை பற்றி விவாதிக்க தயார்: ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் பதில் appeared first on Dinakaran.

Related Stories: