காவிரி விவகாரத்தில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு கர்நாடகா முழுவதும் விவசாயிகள் கன்னட அமைப்பு போராட்டம்

பெங்களூரு: தமிழ்நாடு – கர்நாடகா இடையேயான காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் தலையிட உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டதால், காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி விநாடிக்கு 5000 கனஅடி நீரை கர்நாடக அரசு தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு திறந்துவிட வேண்டியுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவால் அதிருப்தியடைந்த கர்நாடக விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் கன்னட அமைப்பினர் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். உச்சநீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து பெங்களூரு, மைசூரு, மண்டியா, ராம்நகர், சாம்ராஜ்நகர் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கர்நாடக விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெங்களூரு காந்திநகரில் கர்நாடக ரக்‌ஷனா வேதிகே அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் வலியுறுத்தியபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து நாராயண கவுடா உட்பட போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். பெங்களூருவில் மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்றன. பெங்களூரு – மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டமும் செய்தனர்.

The post காவிரி விவகாரத்தில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு கர்நாடகா முழுவதும் விவசாயிகள் கன்னட அமைப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: