சோனியாவுக்கு எதிராக வெறுப்பு பேச்சு அசாம் முதல்வர் மீது போலீசில் புகார்

கவுகாத்தி: மத்தியப்பிரதேச மாநிலத்தின் விதிஷா மாவட்டத்தில் கடந்த 18ம் தேதி நடந்த பேரணியில் பேசிய அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, ‘‘10, ஜன்பத் எரிக்கப்பட வேண்டும்’’ என்று கூறினார். எண் 10, ஜன்பத் என்பது காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தியின் வீடு அமைந்துள்ள முகவரியாகும். அவரின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா மீது அசாம் மாநில மூத்த காங்கிரஸ் தலைவர் தேபபிரதா சாய்கியா காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரில், ‘‘முதல்வர் ஹிமந்தா பேசியது மத்தியப்பிரதேசத்தில் என்றாலும் மீடியாக்கள் மூலம் அவரது பேச்சு அசாமிலும் பரவியுள்ளது. இத்தகைய தேவையற்ற அறிக்கைகள் தவறான நபர்களை வன்முறையில் ஈடுபட செய்யும். 10, ஜன்பத்தில் வசிப்பவர்களுக்கு தீங்கு ஏற்படும் சாத்தியமும் உள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் கூறுகையில், புகார் மனு குறித்து ஆராய்ந்து வருகிறோம், என்று தெரிவித்துள்ளனர்.

The post சோனியாவுக்கு எதிராக வெறுப்பு பேச்சு அசாம் முதல்வர் மீது போலீசில் புகார் appeared first on Dinakaran.

Related Stories: