பீர்க்கங்காய் பஜ்ஜி

தேவையான பொருட்கள்

பீர்க்கங்காய் – 2
கடலை மாவு – 1 கப்
சோள மாவு – 1 கப்
சீரகப்பொடி – 1 டீஸ்பூன்
மல்லித்தூள் – 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
பேக்கிங் சோடா – 2 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை

பீர்க்கங்காய் பஜ்ஜி செய்வதற்கு முதலில் பீர்க்கங்காயின் தோலை நீக்கிவிட்டு, அதனை வட்ட வட்டமாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, சோள மாவு, சீரகப்பொடி, மல்லித்தூள், மிளகாய்த்தூள், பேக்கிங் சோடா மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும். பின்பு அதில் தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு சற்று கெட்டியாக கலந்து வைத்துக்கொள்ளவும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெயை ஊற்றி சூடானதும், வட்டமாக நறுக்கி வைத்துள்ள பீர்க்கங்காயை பஜ்ஜி மாவில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் பீர்க்கங்காய் பஜ்ஜி ரெடி.

The post பீர்க்கங்காய் பஜ்ஜி appeared first on Dinakaran.