அடுத்தடுத்து மோதி நொறுங்கிய 3 கார்கள் 5 பேர் காயம் வேலூர் சத்துவாச்சாரியில்

வேலூர், செப்.21: வேலூர் சத்துவாச்சாரியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 3 கார்கள் மோதிக் கொண்ட விபத்தில் 5 பேர் லேசான காயங்களுடன் தப்பினர்.வேலூர் சத்துவாச்சாரி சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை 8.30 மணியளவில் பெங்களூருவில் இருந்து கர்நாடக பதிவு எண் கொண்ட காரும், சென்னை பதிவு எண் கொண்ட காரும் அடுத்தடுத்து சென்று கொண்டிருந்தன. சத்துவாச்சாரி வள்ளலார் அருகில் சென்றபோது முன்னால் சென்ற கார் மீது முந்தி செல்ல முயன்ற, பின்னால் சென்ற கார் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் முன்னால் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசையில் தடுப்புகளை தாண்டி பறந்து சென்று கவிழ்ந்தது. அப்போது சென்னை மார்க்கத்தில் இருந்து பெங்களூரு நோக்கி வந்த மற்றொரு கார் கவிழ்ந்த கார் மீது மோதியது. இதில் 3 கார்களும் நொறுங்கியது. இதில் 5 பேர் காயமடைந்தனர். இவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அடுத்தடுத்து மோதி நொறுங்கிய 3 கார்கள் 5 பேர் காயம் வேலூர் சத்துவாச்சாரியில் appeared first on Dinakaran.

Related Stories: