தைவானை நோக்கி 103 போர் விமானங்கள்: சீனா அச்சுறுத்தல்

தைபெய்: சீனா தைவானை தனது நாட்டின் ஒரு பகுதி என்று நீண்டகாலமாக கூறி வருகின்றது.இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மோசமடைந்து வருகின்றது. இந்நிலையில் தைவானுக்கு ஆதரவான ஆயுத உதவிகளை வழங்குவதாக சமீபத்தில் அமெரிக்கா அறிவித்து இருந்தது. சீனா – தைவான் இடையே மட்டுமின்றி அமெரிக்கா இடையேயும் பதற்றம் நிலவி வருகின்றது. இதன் காரணமாக அவ்வப்போது சீனா தைவானை அச்சுறுத்தும் வகையில் போர் விமானங்களையும் போர் கப்பல்களையும் அனுப்பி வருகின்றது.

ஞாயிறு காலை 6 மணி முதல் நேற்று காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் சுமார் 103 சீன போர் விமானங்கள் தைவானை நோக்கி சென்றுள்ளன. 40 விமானங்கள் இரு நாடுகளுக்கும் இடையயான பகுதியை கடந்த பின் திரும்பி சென்றதாக தைவான் பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் 24 மணி நேரத்தில் 9 போர் கப்பல்களும் தைவானை சென்றடைந்துள்ளன. தினசரி இதுபோன்று பயிற்சிகளை சீனா மேற்கொண்டு வந்தாலும் தற்போது அதிகப்பட்ச எண்ணிக்கையிலான போர் விமானங்களை அனுப்பியுள்ளன. இது சீன ராணுவத்தின் நடவடிக்கை வெறும் அச்சுறுத்தல் அல்ல துன்புறுத்தல் என்று தைவான் தெரிவித்துள்ளது.

The post தைவானை நோக்கி 103 போர் விமானங்கள்: சீனா அச்சுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: