இந்த சம்பவத்தை தொடர்ந்து, மேலும் பல வீரர்கள் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடத்துக்கு அனுப்பப்பட்டனர். ஆனால், வன பகுதியில் பதுங்கு குழிகளில் மறைந்து இருந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதால் அவர்களை வேட்டையாடுவதில் பாதுகாப்பு படையினருக்கு கடும் சவாலாக உள்ளது. தீவிரவாதிகளின் மறைவிடத்தை நோக்கி தாக்குதல் நடத்தி வருகின்றனர். டிரோன்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் ராணுவம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. தீவிரவாதிகளை தேடும் வேட்டை நேற்றுடன் 6வது நாளை எட்டியது. பாதுகாப்பு படையினரின் தாக்குதலில் பலியான ஒரு தீவிரவாதியின் உடல் கிடப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் இது குறித்த உறுதியான தகவல் இல்லை.
* ‘ஒவ்வொரு துளி ரத்தத்துக்கும் பழிவாங்குவோம்’
இதற்கிடையே நேற்று முன்தினம் ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஜம்மு- காஷ்மீர் ஆளுனர் மனோஜ் சின்கா, ‘‘ அனந்தநாக் சம்பவத்தில் வீர தியாகிகள் சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்துக்கும் பழி வாங்குவோம். தீவிரவாதிகளை வழிநடத்தி சென்றவர்கள் கடும் விலை கொடுக்க வேண்டி வரும். ஒட்டுமொத்த நாடும் ராணுவ வீரர்களுக்கு துணை நிற்கிறது’’ என்றார்.
The post காஷ்மீரில் தீவிரவாதிகள் வேட்டை 6வது நாளாக நீடிப்பு appeared first on Dinakaran.
