தமிழகம் முழுவதும் 1591 குடியிருப்புகள் மற்றும் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம் வீடுகளை திறந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

வேலூர்: தமிழகம் முழுவதும் 1591 குடியிருப்புகள் மற்றும் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் புதிய குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். வேலூர் மாவட்டம் மேல்மொனவூரில் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் புதிய குடியிருப்புகள் திறக்கப்பட்டது. ரூ.11 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 220 குடியிருப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சேலம் தருமபுரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் 1,591 குடியிருப்புகளை முதற்கட்டமாக முதலமைச்சர் திறந்து வைத்தார்.

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் உள்ள 19,046 குடும்பங்களுக்கு 7,469 வீடுகள் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டிருந்தது. 19 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 79.70 கோடி மதிப்பில் 1,591 குடியிருப்புகள் திறக்கப்பட்டது. இலங்கை தமிழர் முகாமில் அமைக்கப்பட்டுள்ள வீடுகளின் பயனாளிகளுக்கு வீட்டு சாவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பயனாளிகளுக்கு வீட்டு சாவியுடன் 8 பொருட்கள் அடங்கிய வீட்டு உபயேக பொருட்களையும் வழங்கினார்.

குடியிருப்புகளை ஒப்படைக்கும் நிகழ்வின் போது மற்ற மாவட்டங்களில் உள்ள சேலம் மாவட்டத்தில் இருக்கக்கூடிய பயனாளி ஒருவருக்கு முதல்வர் காணொளி வாயிலாக கலந்துரையாடினார். வேலூர் மாவட்டத்தில் நேரடியாகவும் பயனாளிகளிடம் கலந்துரையாடினார். அப்போது அவர்கள் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக முறையாக குடியிருப்பு வசதிகள் இல்லாமல் குறுகிய இடத்தில் சுற்றுப்புறமும் தூய்மை இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு இடையில் வாழ்ந்து வந்ததாகவும் தெரிவித்தனர்.

எனவே புதிய குடியிருப்புகள் கட்டிகொடுக்கப்பட்டதில் மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். அதே சமயம் குடியிருப்பு மட்டுமின்றி மேல்மொனவூருக்கு மட்டும் இதர வசதிகள் மற்றும் வேலைவாய்ப்பு, உணவு ஆகியவற்றிக்கு சுமார் ரூ.30 கோடி ஒதுக்கியுள்ளதும் மிகுந்த பயனுள்ளதாக இருக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

The post தமிழகம் முழுவதும் 1591 குடியிருப்புகள் மற்றும் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம் வீடுகளை திறந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: