ஆக்கிரமிப்பு சுவர் இடித்து அகற்றம் குடியாத்தம் அருகே சாலையின் குறுக்கே கட்டப்பட்ட

குடியாத்தம், செப்.17: குடியாத்தம் அருகே சாலையின் குறுக்கே கட்டப்பட்ட ஆக்கிரமிப்பு சுவர் இடித்து அகற்றப்பட்டு அந்த சாைல பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த முல்லைநகர், கிருஷ்ணா நகர் பகுதிக்கு செல்லும் தெருவில் தனிநபர் ஒருவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தடுப்பு சுவர் கட்டியிருந்தார். இதனால் முல்லைநகர் பகுதியில் இருந்து கிருஷ்ணா நகருக்கு செல்லும் பொதுமக்கள் 2 தெருக்களை சுற்றியபடி சென்று வருகின்றனர். இந்நிலையில் இருபகுதிகளுக்கு இடையே கட்டப்பட்டுள்ள சுவற்றை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் சுவர் அருகே நேற்று முன்தினம் முற்றுகையிட்டனர். தகவலறிந்து வந்த குடியாத்தம் கோட்டாட்சியர் வெங்கட்ராமன், தாசில்தார் விஜயகுமார் மற்றும் வருவாய்த்துைறயினர் விசாரணை நடத்தி சுவர் இடித்து அகற்றப்படும் என தெரிவித்தனர். இதனையடுத்து அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர். தொடர்ந்து குடியாத்தம் பிடிஓ கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சுவரை அகற்ற உத்தரவிட்டனர். தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் சுவர் இடித்து அகற்றப்பட்டது. தொடர்ந்து அந்த வழியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஆக்கிரமிப்பு சுவர் இடித்து அகற்றம் குடியாத்தம் அருகே சாலையின் குறுக்கே கட்டப்பட்ட appeared first on Dinakaran.

Related Stories: