திமுக முப்பெரும் விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு மாநகர செயலாளர் ப.கார்த்திகேயன் எம்எல்ஏ அழைப்பு வேலூர் அடுத்த பள்ளிகொண்டாவில் இன்று நடைபெறும்

வேலூர், செப்.17: வேலூர் அடுத்த பள்ளிகொண்டாவில் இன்று நடைபெறும் திமுக பவள விழா மற்றும் முப்பெரும் விழாவில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரண்டு வர வேண்டும் என்று மாநகர செயலாளர் ப.கார்த்திகேயன் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து வேலூர் மாநகர செயலாளரும், வேலூர் எம்எல்ஏவுமான ப.கார்த்திகேயன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா கந்தனேரி அருகே இன்று நடைபெற உள்ள கலைஞர் நூற்றாண்டு விழா, திமுக பவள விழா, முப்பெரும் விழாவில் கட்சி தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். இந்நிகழ்ச்சியில், வேலூர் மாநகர திமுக நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி செயலாளர், பகுதி நிர்வாகிகள், வட்ட செயலாளர், வட்ட நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள், அணிகளின் செயலாளர்கள், துணை அமைப்பாளர்கள், கட்சி முன்னோடிகள் பொதுமக்கள் அனைவரும் முப்பெரும் விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post திமுக முப்பெரும் விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு மாநகர செயலாளர் ப.கார்த்திகேயன் எம்எல்ஏ அழைப்பு வேலூர் அடுத்த பள்ளிகொண்டாவில் இன்று நடைபெறும் appeared first on Dinakaran.

Related Stories: