ஏவுகணை, போர் விமானங்கள் உள்பட ரூ.45,000 கோடிக்கு ராணுவ தளவாடங்கள் வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்

புதுடெல்லி: ஏவுகணை, போர் விமானங்கள் உள்பட ரூ.45,000 கோடிக்கு ராணுவ தளவாடங்கள் வாங்க பாதுகாப்பு அமைச்சகம் நேற்று ஒப்புதல் அளித்தது. டெல்லியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நேற்று நடந்த பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் (டிஏசி) கூட்டத்தில் ஒன்பது கொள்முதல் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பீரங்கி துப்பாக்கிகள், ரேடார்களை விரைவாக ஒருங்கிணைக்கவும் நிலைநிறுத்தவும் விரைந்து செல்லும் வாகனம் (எச்எம்வி) மற்றும் துப்பாக்கி இழுத்து செல்லும் டோவிங் வாகனங்களை வாங்குவதற்கும் டிஏசி ஒப்புதல் அளித்துள்ளது.

சக்திவாய்ந்த துருவாஸ்த்ரா குறுகிய தூர ஏவுகணை, இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து சுகோய்-30 எம்.கே.ஐ. ரக போர் விமானங்கள் 12 உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை ரூ.45,000 கோடி செலவில் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்திய கடற்படைக்கு தேவையான அடுத்த தலைமுறை கப்பல்களை வாங்கவும் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஏவுகணை, போர் விமானங்கள் உள்பட ரூ.45,000 கோடிக்கு ராணுவ தளவாடங்கள் வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் appeared first on Dinakaran.

Related Stories: