பூமியில் இருந்து வெளியாகும் எலக்ட்ரானின் உதவியால் நிலவின் மேற்பரப்பில் தண்ணீர் விஞ்ஞானிகள் தகவல்

வாஷிங்டன் : பூமியில் இருந்து வெளியாகும் எலக்ட்ரானின் உதவியால் நிலவின் மேற்பரப்பில் தண்ணீர் உருவாகி இருப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் உள்ள ஹவாய் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குழுவின் நிலவின் மேற்பரப்பில் தண்ணீர் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். ஆய்வின் ஒரு பகுதியில் பூமியில் இருந்து வெளியேறும் எலக்ட்ரான்கள் நிலவின் மேற்பரப்பு தட்பவெப்பத்தை நிர்ணயிக்க வாய்ப்பு உள்ளதாக கண்டறிந்தனர். ஆனால் இதன் மூலம் அங்கு தண்ணீர் உருவாகி உள்ளதா? உருவாகி உள்ளது என்றால் அது எந்த வடிவத்தில் உள்ளது. அதை எதிர்காலத்தில் மனித இனம் பயன்படுத்த முடியுமா என்பது குறித்த அடுத்தக்கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் இந்த ஆராய்ச்சி குறித்த ஆய்வு கட்டுரை ஒன்றை ஹவாய் பல்கலைக்கழக குழுவினர் நேச்சர் ஆஸ்ட்ரானமி என்ற இதழில் வெளியிட்டுள்ளனர். அதில் தங்களது ஆய்விற்கு கடந்த 2008ம் ஆண்டு அக்டோபரில் இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 1 விண்கலம் மிகப்பெரிய அளவில் உதவியதாக குறிப்பிட்டுள்ளனர். சந்திரயான் 1 விண்கலம் அனுப்பிய தகவல்களின் உதவியோடு பூமியில் இருந்து வெளியாகும் எலெக்ட்ரான்கள் மூலமாக நிலவின் மேற்பரப்பில் தண்ணீர் உருவாகி இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

The post பூமியில் இருந்து வெளியாகும் எலக்ட்ரானின் உதவியால் நிலவின் மேற்பரப்பில் தண்ணீர் விஞ்ஞானிகள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: