அவருக்கு டெங்கு, டைபாய்டு உள்ளிட்ட காய்ச்சலுக்கான சோதனைகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால், அவற்றில் எதுவுமே இல்லை என்ற விவரம் வெளியாகி உள்ளது. இருந்தும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு இருந்த வேளையில் இன்று அதிகாலை சிந்து உயிரிழந்துள்ளார். தீவிர காய்ச்சல் காரணமாக பயிற்சி மருத்துவர் உயிரிழந்த விவகாரம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அவர் இறந்ததற்கான காரணம் குறித்து அறிவதற்காக இவரது மருத்துவ அறிக்கைகள், மருத்துவ மாதிரிகள் சென்னைக்கு அனுப்பப்பட்டு உள்ளன. அங்கு சோதனை முடிவுகள் வெளியான பின்பு தான் சிந்து எவ்வகையான காய்ச்சல் காரணமாக உயிரிழந்தார் என்ற விவரம் தெரிய வரும் என கூறப்படுகிறது. ஏற்கனவே தமிழகத்தில் தற்போது நிபா வைரஸ் தாக்கம் அதிகரிக்க தொடங்கிய காரணத்தால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நேரத்தில் காய்ச்சல் காரணமாக பயிற்சி மருத்துவர் உயிரிழந்த விவகாரம் பேசிபொருளாக மாறியுள்ளது.
The post திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற பயிற்சி பெண் மருத்துவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.
