பாதுகாப்பான முறையில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்வது குறித்து பயிற்சி

திருவள்ளூர்: தமிழ்நாடு அரசின் பேரூராட்சிகளின் இயக்குநர் கிரண் குராணா, மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் உத்தரவின் பேரில் மாவட்ட பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பேரூராட்சிகளிலும் இயங்கி வரும் கழிவு நீர் லாரிகளின் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் கிளீனர்களுக்கு பயிற்சி முகாம் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. திருவள்ளூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் (பொ) லதா தலைமை தாங்கினார். செயல் அலுவலர் (நிர்வாகம்)(பொ) வெங்கடேசன் மற்றும் அனைத்து பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் முன்னிலை வகித்தனர்.

இந்த பயிற்சி முகாமில் திருவள்ளூர் மாவட்டத்தில் மனித கழிவுகளை மனிதனே அகற்றும் தொழில் புரிவோர் தடுப்பு மற்றும் அவர்களது மறுவாழ்வு சட்டம் 2013 விதிகளின்படி வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள நச்சுத் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணிகளை மனிதர்களை கொண்டு மேற்கொள்வதை இயந்திரம் மூலம் மட்டுமே பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கான பயிற்சி அளிக்கப்பட்டது. கழிவுநீர் ஒழுங்குமுறை மேலாண்மை விதிகள் மற்றும் வழிகாட்டுதலின்படி பாதுகாப்பு உபகரணங்களோடு இயந்திரங்களைக் கொண்டு கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தல் குறித்த பயிற்சியில் பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் கொண்டு பாதுகாப்பான முறையில் கழிவுநீர் தொட்டியினை சுத்தம் செய்யவும், நவீன பாதுகாப்பு முறைகளை பின்பற்றுவது போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டன.

The post பாதுகாப்பான முறையில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்வது குறித்து பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: