இந்தியா-அமெரிக்கா உறவு வலுப்பெற்றுள்ளது: அமெரிக்க வௌியுறவு அமைச்சர் கருத்து

வாஷிங்டன்: இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவு வலுப்பெற்றுள்ளதாக அமெரிக்க வௌியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் கூறியுள்ளார். ஹாப்கின்ஸ் ஸ்கூல் ஆஃப் அட்வான்ஸ்டு இன்டர்நேஷனல் ஸ்டடீஸ் “புதிய சகாப்தத்தில் அமெரிக்காவின் ராஜதந்திரத்தின் சக்தி மற்றும் நோக்கம்” என்ற தலைப்பில் ஆன்டனி பிளிங்கன் உரையாற்றினார். அப்போது, “மேம்பட்ட குறைக்கடத்தி தயாரிப்பு முதல் பாதுகாப்பு ஒத்துழைப்பு வரை அனைத்திலும் இந்தியா, அமெரிக்கா இடையேயான உறவு மற்றும் ஒத்துழைப்பு இதற்குமுன் ஆற்றல் வாய்ந்ததாக இருந்ததில்லை. தற்போது அது வலுப்பெற்று வருகிறது.

ஜி20 உச்சி மாநாட்டை தொடர்ந்து இந்தியா, அமெரிக்கா இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் இருதரப்பு ஒத்துழைப்புகளால் பயன் பெறும். தடுப்பூசிகள் தயாரிப்பு, கடல் பாதுகாப்பை வலுப்படுத்துதல், பருவநிலை சவால்களை சமாளிப்பது என அனைத்திலும் உலக நாடுகளுக்கு வழங்குவதற்காக இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியாவுடனான குவாட் அமைப்பை ஜோ பைடன் நிர்வாகம் அதிகரித்துள்ளது. தூய்மையான எரிசக்தி உற்பத்தி மற்றும் டிஜிட்டல் இணைப்பை ஊக்குவிக்க சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகள் இந்தியா, அமெரிக்காவுடன் இணைந்து உலகம் முழுவதும் விநியோக சங்கிலிகளை வலுப்படுத்தும்” இவ்வாறு தெரிவித்தார்.

The post இந்தியா-அமெரிக்கா உறவு வலுப்பெற்றுள்ளது: அமெரிக்க வௌியுறவு அமைச்சர் கருத்து appeared first on Dinakaran.

Related Stories: