ஹூண்டாய் ஐ20 பேஸ்லிப்ட்

ஹூண்டாய் நிறுவனம் ஐ20 பேஸ்லிப்ட் மாடலை அறிமுகம் செய்துள்ளது. துவக்க ஷோரூம் விலையாக சுமார் ரூ.6.99 லட்சம் எனவும், டாப் வேரியண்ட் சுமார் ரூ.11.01 லட்சம் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எரா, மேக்னா, ஸ்போர்ட்ஸ், அஸ்டா மற்றும் அஸ்டா (ஓ) என 5 வேரியண்ட்கள் இதில் உள்ளன. முன்புற கிரில்கள், ஹெட்லாம்ப், முன்புற பம்பர் உட்பட தோற்றத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய அமேசான் கிரீன் வண்ணம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே உள்ள வேரியண்ட்களில் இருந்த பனி விளக்குகள் இதில் இடம்பெறவில்லை.

உட்புறம் 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் டிஸ்பிளே, முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 7 ஸ்பீக்கர்கள் கொண்ட போஸ் சவுண்ட் சிஸ்டம், வயர்லெஸ் போன் சார்ஜர், சிங்கிள் பேனல் சன்ரூப், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் உட்பட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. தொழில்நுட்ப ரீதியாக மாற்றமில்லை. 1.2 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் இடம் பெற்றுள்ளார். இது அதிகபட்சமாக 83 எச்பி பவரையும், 115 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

The post ஹூண்டாய் ஐ20 பேஸ்லிப்ட் appeared first on Dinakaran.

Related Stories: