சுகாதாரத்துறை அமைச்சர் இன்று கோவை வருகை தெற்கு மாவட்ட செயலாளர் அறிக்கை

சூலூர், செப்.14: கோவை மாவட்டம் பகுதிகளில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் இன்று கோவை வருகிறார். கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டத்தில் வால்பாறை, ஆனைமலை, பொள்ளாச்சி உள்ளிட்ட கோவை தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அமைச்சர் கலந்து கொள்ள உள்ளார்.வால்பாறையில் சின்கோனா மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல்,வால்பாறையில் மருத்துவர்களுடன் கலந்துரையாடல் ஆனைமலையில் பெரியபோது, அரிசி பாளையம், அரசம்பாளையம் ஆகிய பகுதிகளில் ரூ.1.38 கோடி மதிப்பில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களையும், வட்டார பொது புதிய மருத்துவமனை அலகு கட்டிடங்களையும் அமைச்சர் திறந்து வைக்க உள்ளார்.

அதை தொடர்ந்து மேலும் பல்வேறு நிகழ்ச்சியில் அமைச்சர் கலந்து கொள்ள உள்ளதால் கோவை தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து நிர்வாகிகளும் தொண்டர்களும் திரளாக வந்து நலத்திட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

The post சுகாதாரத்துறை அமைச்சர் இன்று கோவை வருகை தெற்கு மாவட்ட செயலாளர் அறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: