திருச்செந்தூரில் ஆவணி திருவிழா 10-ம் நாள் தேரோட்டம் கோலாகலம்: திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம்

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணி சுவாமி கோயில் ஆவணி திருவிழாவில் 10-ம் நாள் தேரோட்டத்தில் வடம்பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். கடந்த 4-ம் தேதி ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் நாள்தோறும் சுவாமியும் அம்பாளும் இரண்டு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதன் முக்கிய நிகழ்ச்சியான 10-ம் நாள் தேரோட்டத்தை ஒட்டி அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும், உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.

தொடர்ந்து சுவாமி குமராவிடங்க பெருமான் வள்ளி, தெய்வானையுடன் 4 ரத வீதிகளில் திருத்தேரில் வளம் வந்து அருள் பாலித்தார். அப்போது முருகனுக்கு அரோகரா, வெற்றி வேல்! வீர வேல்! என பக்தியுடன் முழக்கமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருச்செந்தூர் சுப்பிரமணி கோயில் தேரோட்டத்தையொட்டி துணை காவல் கண்காணிப்பாளர் வசந்தாஸ் தலைமையில் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 

The post திருச்செந்தூரில் ஆவணி திருவிழா 10-ம் நாள் தேரோட்டம் கோலாகலம்: திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: