நகரின் மையத்தில் விஏஓ ஆபிசை கட்ட வேண்டும்

பள்ளிபாளையம், செப்.13: கன்னியாகுமரி சென்னை தொழில் தட திட்டத்தின் கீழ், பள்ளிபாளையம் பகுதியில் மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. பள்ளிபாளையம் நான்கு சாலை பகுதியில், மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதனால், மாற்றுப்பாதையாக சங்ககிரியில் இருந்து வந்து செல்லும் வாகனங்கள், நகராட்சி அலுவலகம் முன்புள்ள சார் பதிவாளர் அலுவலகம், வருவாய் அலுவலகம் வழியாக ஈரோடு வந்து செல்ல, மாற்றுப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

இதற்காக விஏஓ அலுவலகம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. இதையடுத்து, கடந்த 2 மாதமாக வாடகை கட்டிடத்தில் விஏஓ அலுவலகம் இயங்கி வருகிறது.ஆலம்பாளையம் பேரூராட்சி அலமேடு பகுதியில், தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த 40 சென்ட் புறம்போக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு, விஏஓ அலுவலகம் கட்ட வருவாய்த்துறை முடிவு செய்துள்ளது. புதுப்பாளையம் கிராம ஊராட்சி எல்லையான இந்த பகுதியில், விஏஓ அலுவலகம் கட்டப்பட்டால், நகராட்சி பகுதியில் இருந்து வரும் மக்களுக்கு எளிதாக இருக்காது. புதிய அலுவலகம் நகரின் மையப்பகுதியில் அமைந்தால் பல்வேறு தரப்பட்ட மக்களும் எளிதாக வந்து செல்ல வசதியாக இருக்கும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து பள்ளிபாளையம் நகர்மன்ற தலைவர் செல்வராஜ், கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

The post நகரின் மையத்தில் விஏஓ ஆபிசை கட்ட வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: