ராசிபுரம் வாரச்சந்தை பிசுபிசுத்தது

ராசிபுரம், செப்.13: ராசிபுரத்தில் கூடிய வாரச்சந்தை மழையால் பிசுபிசுத்தது. சந்தையில் வியாபாரம் பாதிப்படைந்தது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகராட்சி பகுதியில் செவ்வாய்க்கிழமை தோறும் வாரச்சந்தை கூடுகிறது. பழமையான இந்த சந்தைக்கு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து காய்கறி மற்றும் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்வர். காலை முதல் வெயில் கொளுத்திய நிலையில், மாலை 4 மணிக்கு மேல் வானில் கருமேகக் கூட்டம் திரண்டது. திடீரென சாரல் மழை பெய்யத் துவங்கியது.

அரை மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால், சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது. வேலை முடிந்து வீடு திரும்பும் வழியில் பொதுமகள் மற்றும் அரசு அலுவலர்கள் வாரச்சந்தைக்கு வந்து தேவையான பொருட்களை வாங்கிச் செல்வது வழக்கம். அந்த சமயம் பார்த்து மழை பெய்ததால், வாரச்சந்தை வெறிச்சோடி காணப்பட்டது. இதனால், வியாபாரிகள் தாங்கள் கொண்டு வந்திருந்த காய்கறிகளை திரும்ப எடுத்துச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
சிலர் வந்த விலைக்கு காய்கறிகளை விற்பனை செய்தனர்.

The post ராசிபுரம் வாரச்சந்தை பிசுபிசுத்தது appeared first on Dinakaran.

Related Stories: