“கர்நாடக அணைகளில் இருந்து இனி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது”: துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் திட்டவட்டம்

பெங்களூரு: கர்நாடக அணைகளில் இருந்து இனி தமிழகத்திற்கு திறக்க தண்ணீர் இல்லை என துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு 24 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கடந்த 15 நாட்களுக்கு முன்பு காவிரி மேலாண்மை ஆணையத்திடம் வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து காவிரி மேலாண்மை ஆணையம் 15 நாட்களுக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி கடந்த 15 நாட்களாக 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டு வந்தது. இன்று மீண்டும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் பிற்பகல் 2:30 மணிக்கு நடைபெற உள்ளது.

இதனிடையே இந்த கூட்டத்தில் கர்நாடகாவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார், தற்போதைக்கு அணையில் எவ்வளவு தண்ணீர் இருந்ததோ அது முழுவதுமாக திறக்கப்பட்டுவிட்டது. இனி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என திட்டவட்டமாக கூறினார். தற்போது உள்ள தண்ணீர் கர்நாடகாவின் குடிநீர் பயன்பாட்டிற்கே போதுமானதாக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

குடிநீருக்கு சேமித்து வைக்காமல் தண்ணீரை திறந்து விட முடியாது என டி.கே.சிவக்குமார் மறுப்பு தெரிவித்துவிட்டார். இன்றைய ஆணைய கூட்டத்திலும் இதனையே கர்நாடகாவின் நிலைப்பாடாக முன்வைப்போம். அவர்கள் வேண்டுமெனில் நேரில் வந்து பார்த்து கொள்ளட்டும். மழை வந்தால் தாங்கள் தண்ணீர் திறந்துவிடுவோம் என்றும் டி.கே.சிவக்குமார் செய்தியாளர்களிடம் கூறினார்.

The post “கர்நாடக அணைகளில் இருந்து இனி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது”: துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் திட்டவட்டம் appeared first on Dinakaran.

Related Stories: