லிபியாவில் டேனியல் புயலின் கோரத்தாண்டவத்தால் 2 ஆயிரம் பலி.. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 6 ஆயிரம் பேரின் கதி என்ன ?

லிபியா : வடக்கு ஆப்ரிக்க நாடுகளின் ஒன்றான லிபியாவில் டேனியல் புயலின் கோரத்தாண்டவத்தால் 2 ஆயிரம் மரணம் அடைந்துவிட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் அதிர்ச்சியூட்டும் செய்தி ஓன்றை வெளியிட்டுள்ளது. குறைந்தது 5 ஆயிரம் பேர் முதல் 6 பேர் வரை காணாமல் போய்விட்டதாகவும் செய்தி வெளியாகி உள்ளது. கிரீஸ் நாட்டை தாக்கிய டேனியல் புயல், லிபியாவின் பல்வேறு நகரங்களை தாக்கியதில் அங்கு தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் டெர்னா உள்ளிட்ட இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக டெர்னா நகரில் உள்ள ஒரு பெரிய குடியிருப்பே வெள்ளத்தில் முற்றிலும் அடித்துச் செல்லப்பட்டு விட்டதாக லிபியா நாட்டு அரசு கூறியுள்ளது.

இதில் 2 ஆயிரம் பேர் உயிரிழந்துவிட்டனர் என்றும் பல இடங்களில் குறைந்தது 6 ஆயிரம் பேரை காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய தரைக்கடல் எல்லையில் அமைந்துள்ள லிபியாவில் டேனியல் புயல் ஏற்படுத்தி உள்ள அதிபயங்கர பாதிப்பு காரணமாக அந்த நகரங்கள் அனைத்தும் பேரழிவு உள்ள இடங்களாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 6 ஆயிரம் பேரின் கதி என்ன ஆனது என்று தெரியாததால் உலக நாடுகளும் அதிர்ச்சியில் உறைந்துள்ளன. லிபியாவில் புயல் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை தொடர்பான கூடுதல் தகவல்கள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை.

The post லிபியாவில் டேனியல் புயலின் கோரத்தாண்டவத்தால் 2 ஆயிரம் பலி.. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 6 ஆயிரம் பேரின் கதி என்ன ? appeared first on Dinakaran.

Related Stories: