அவிநாசியில் தற்கொலைக்கு எதிரான கையெழுத்து இயக்கம்

 

அவிநாசி,செப்.12: உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு அவிநாசி புதிய பஸ் நிலையத்தில் தமிழ்நாடு மன நல மருத்துவர் சங்கம் மற்றும் அஹல் மன நல மருத்துவமனை சார்பில், தற்கொலைக்கு எதிரான கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. அவிநாசி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜவேல் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.அஹல் மருத்துவமனை இயக்குநர்கள் டாக்டர் வெங்கடேஷ்குமார் மற்றும் டாக்டர் மகேஸ்வரி ஆகியோர் தலைமை தாங்கினார்.அவிநாசி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்க்டர் சக்திவேல்,உளவியல் நிபுனர் பெர்ணான்டோ,மனநல அலோசகர் பிரகதீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தற்கொலைக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

The post அவிநாசியில் தற்கொலைக்கு எதிரான கையெழுத்து இயக்கம் appeared first on Dinakaran.

Related Stories: