தொடர்ந்து சென்னை பள்ளி மாணவ, மாணவியர்கள் எடுத்த புகைப்படங்கள் “அக்கம் பக்கம்” என்ற தலைப்பில் ரிப்பன் கட்டிட வளாகத்தில் புகைப்பட கண்காட்சியாக முதல்வரால் கடந்த 22ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இந்த கண்காட்சி 10.9.2023 அன்று நிறைவு பெற்றதை தொடர்ந்து அதில் இடம்பெற்ற புகைப்படங்களை எடுத்த சென்னை பள்ளி மாணவ, மாணவிகளை பாராட்டி, மேயர் பிரியா நேற்று ரிப்பன் கட்டிட அலுவலக கூட்டரங்கில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி அவர்களுடன் குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டார். நிகழ்வில், துணை ஆணையர் (கல்வி) ஷரண்யா அறி, கல்வி அலுவலர் வசந்தி, சென்னை போட்டோ பியனாலே அறக்கட்டளை உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
The post சென்னை தினத்தை முன்னிட்டு ‘அக்கம்பக்கம்’ என்ற தலைப்பில் புகைப்பட கண்காட்சி நிறைவு: பள்ளி மாணவர்களுக்கு மேயர் பாராட்டு appeared first on Dinakaran.