மேலும், 20 மெட்ரிக் டன்னுக்கு அதிகமாக கட்டிட கழிவுகளை உருவாக்குபவர்கள் பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் அமைக்கப்பட்டுள்ள மறு பயன்பாட்டு மையங்களுக்கு கட்டிட கழிவுகளை அனுப்பி வைக்க வேண்டும் அவ்வாறு கட்டிட கழிவுகளைஅனுப்புவதற்கு முன் உரிய கட்டணத்தை சென்னை மாநகராட்சி கருவூலத்தில் செலுத்தியபிறகு கட்டிட கழிவுகள் கொட்டுவதற்கு அனுமதி அளிக்கப்படும்.
சென்ணை மாநகராட்சி மண்டலங்களில் உள்ள 15 இடங்களில் நாள்தோறும் சராசரியாக 1060 மெட்ரிக் டன் கட்டிட கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. ஜனவரி 2022 முதல் ஆகஸ்ட் 2023 வரை பொது இடங்களில் கட்டிட கழிவுகளை கொட்டிய நபர்களுக்கு ரூ.1,87,88,678 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. எனவே, சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்கும் வகையில் சென்னை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post சென்னையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களை தவிர பொது இடத்தில் கட்டிட கழிவுகளை கொட்டினால் ரூ.5000 வரை அபராதம்: மாநகராட்சி எச்சரிக்கை appeared first on Dinakaran.
