இந்தியாவில் பைடனை சந்திக்க செய்தியாளர்களுக்கு அனுமதி மறுப்பு?: புகார் எழுந்திருந்த நிலையில் வியட்நாமில் பைடன் பேச்சால் பரபரப்பு

டெல்லி: இந்தியா வந்த பைடனை சந்திக்க செய்தியாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று புகார் எழுந்திருந்த நிலையில் ஊடக சுதந்திரம் பற்றி மோடியிடம் தாம் பேசியதாக பைடன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஜி 20 மாநாட்டிற்காக இந்தியா வந்த அமெரிக்க அதிபர் பைடன் கடந்த 8-ம் தேதி பிரதமர் மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை மேற்கொண்டார். பேச்சுவார்த்தைக்கு பிறகு மோடியும், பைடனும் கூட்டாக செய்தியாளர்களை சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், செய்தியாளர் சந்திப்பு நடைபெறவில்லை.

அதுகுறித்து அப்போதே சமூக வலைதளத்தில் பதிவிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் பலமுறை வலியுறுத்தியும் ஒன்றிய அரசு செய்தியாளர்கள் சந்திப்பை நடத்த விடவில்லை என்றும் பைடனை தனியாக சந்திக்கவும் செய்தியாளர்கள் அனுமதிக்கப்படவில்லை என்றும் பைடனுடன் வந்த அதிகாரிகள் கூறியதாக தெரிவித்தார். வியட்நாம் செல்லும் பைடன் அங்கு செய்தியாளர்களை சந்திப்பார் எனவும் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருந்தார். அவர் கூறியபடியே வியட்நாமில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய பைடன் மனித உரிமைகளை மதிப்பதன் முக்கியத்துவம் ஊடக சுதந்திரம் பற்றி மோடியுடன் விவாதித்ததாக தெரிவித்திருக்கிறார்.

The post இந்தியாவில் பைடனை சந்திக்க செய்தியாளர்களுக்கு அனுமதி மறுப்பு?: புகார் எழுந்திருந்த நிலையில் வியட்நாமில் பைடன் பேச்சால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: