சிலி மக்களாட்சி கவிழ்ப்பின் 50-ம் ஆண்டு நிறைவு பேரணி: உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் பேரணி சென்றபோது மோதல்

சாண்டியாகோ: சிலியில் சர்வாதிகார ஆட்சியின் போது உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் நடைபெற்ற பேரணியில் பொதுமக்களும், காவல்துறைக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தலைநகர் சாண்டியாகோவில் உள்ள பேலஸ் பகுதியில் பேரணி நடைபெற்றது. 1973-ம் ஆண்டு சிலியில் சர்வாதிகார ஆட்சி தொடங்கிய போது கொல்லப்பட்டவர்கள், கைது செய்யப்பட்டவர்கள், காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் இந்த பேரணியில் கலந்து கொண்டனர். அவர்கள் தங்கள் உறவினர்களின் புகைப்படங்களை ஏந்தி பேரணியாக சென்றபோது காவல்துறையினருடன் மோதல் ஏற்பட்டது.

பொதுமக்கள் காவல்துறையின் மீது கற்களை வீசினர். பதிலுக்கு போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் கூட்டத்தை கலைத்தனர். 1973-ம் ஆண்டு சிலியில் ஜனாதிபதி தலைமையிலான மக்களாட்சி கலைக்கப்பட்டு சர்வாதிகார ஆட்சி அமைக்கப்பட்டது. அப்போது ஆட்சி மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த 3000-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். சுமார் 28,000 பேர் சித்தரவதைக்குள்ளானார்கள். எனவே அப்போது கொல்லப்பட்டவர்களின் 50-வது ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கும் வகையில் பேரணி நடைபெற்றது. கம்யூனிஸ்ட் மற்றும் சோஷியலிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் அமைதியாக பேரணியில் பங்கேற்றதாகவும், அகஸ்டோ பினோசெட் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

The post சிலி மக்களாட்சி கவிழ்ப்பின் 50-ம் ஆண்டு நிறைவு பேரணி: உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் பேரணி சென்றபோது மோதல் appeared first on Dinakaran.

Related Stories: