முதுகலை மாணவியர் சேர்க்கை கலந்தாய்வு

நாமக்கல், செப்.9: நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலை கல்லூரியில் முதுகலை படிப்பில் எம்.ஏ. தமிழ், பொருளியல், வரலாறு, எம்.காம், எம்.எஸ்சி. கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் என 11 பாடப்பிரிவுகள் உள்ளன. இவற்றில் 296 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் சேர மாணவியர் விண்ணப்பம் அளித்திருந்தனர். கல்லூரி கல்வி இயக்கம் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட ரேங்க் பட்டியல் அடிப்படையில். நேற்று கல்லூரியில் மாணவியர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடந்தது. கல்லூரி முதல்வர் கோவிந்தராஜன் முன்னிலையில் நடைபெற்ற கலந்தாய்வில், பேராசிரியைகள் மூலம் சான்றிதழ்கள் மற்றும் அரசின் ஒதுக்கீடுகள் அடிப்படையில் மாணவியர் சேர்க்கைக்கான அனுமதி வழங்கப்பட்டது. விடுபட்டவர்களுக்கு இன்று (9ம் தேதி) கலந்தாய்வு நடைபெறுகிறது.

The post முதுகலை மாணவியர் சேர்க்கை கலந்தாய்வு appeared first on Dinakaran.

Related Stories: