பின்னர் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணியில், டேவிட் வார்னர் 0, டிராவிஸ் ஹெட் 33, கேப்டன் மிட்செல் மார்ஷ் 17, அலெக்ஸ் கேரி 3, ஸ்டோனிஸ் 17 ரன்னில் வெளியேற 113 ரன்னுக்கு 7 விக்கெட் இழந்து தடுமாறியது. ரபாடா வீசிய பவுன்சர் கேமரூன் கிரீனின் ஹெல்மெட்டில் தாக்கியது. இதனால் அவர் ரிட்டயர்ட் ஹர்ட்டில் வெளியேற அவருக்கு பதிலாக களம் இறங்கிய மார்னஸ் லாபுசாக்னே நாட் அவுட்டாக 80, ஆஷ்டன் அகர் 48 ரன் விளாச 40.2 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 225 ரன் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. மார்னஸ் லாபுசாக்னே ஆட்டநாயகன் விருதுபெற்றார். 2வது போட்டி நாளை இதே மைதானத்தில் நடக்கிறது.
The post தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி: லாபுசாக்னே சிறப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலியா வெற்றி appeared first on Dinakaran.