கும்பகோணத்தில் ஒரே சமயத்தில் புத்தக வடிவில் அமர்ந்து வாசிப்பில் ஈடுபட்ட 3,000 மாணவிகள்… பிரம்மாண்டமான காட்சி..!!

கும்பகோணம்: பொதுமக்கள் இடையே புத்தக வாசிப்பை ஊக்குவிப்பதற்காக கும்பகோணத்தில் 3,000 கல்லூரி மாணவிகள் மைதானத்தில் ஒன்று திரண்டு சுமார் அரை மணி நேரம் புத்தக வாசிப்பில் ஈடுப்பட்டனர். அண்மைக்காலமாக, நம்மிடையே புதிய நூல்களை வாங்கும் பழக்கமும், நூலகங்களில் நூல்களை எடுத்து வாசிக்கும் பழக்கமும் குறைந்து வருகின்றன. அறிவியல் வளா்ச்சியால் அச்சுத்துறையில் புதியதொரு புரட்சியே மலா்ந்தது. நம்மிடத்தில் உடனே அது தொடா்பான மிகப்பெரிய எதிா்பாா்ப்பும் ஆா்வமும் வளா்ந்தன. ஆனால், அந்த மகிழ்ச்சி நிலையானதானதாக அமையவில்லை.

வாசிப்புப் பழக்கம் குறைந்து வருவதற்கு சில காரணங்கள் உள்ளன.பெற்றோா்களுக்கு வீட்டில் புத்தகங்களை எடுத்துப் படிக்கும் பழக்கம் இல்லாததால், பிள்ளைகளும் அப்படியே அமைந்து விடுகின்றனா். இணையவழித் தோற்றங்களும் வாசிப்புப் பழக்கத்தை வற்றச் செய்துவிட்டன. ஸ்மார்ட் போன்களின் வருகையால் மக்களிடையே புத்தக வாசிப்பு குறைந்து விட்டதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் புத்தக வாசிப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இதையா கல்லூரி நிர்வாகம் சார்பில் இந்த பிரமாண்ட புத்தக வாசிப்பு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

The post கும்பகோணத்தில் ஒரே சமயத்தில் புத்தக வடிவில் அமர்ந்து வாசிப்பில் ஈடுபட்ட 3,000 மாணவிகள்… பிரம்மாண்டமான காட்சி..!! appeared first on Dinakaran.

Related Stories: