இந்த ஆய்வு அறிக்கையில், ‘அமெரிக்காவில் தற்போது 18 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அடிப்படையிலான கிரீன் கார்டு பெறுவதற்கு விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 63 சதவீதம் பேர் இந்தியர்கள். குடும்ப உறுப்பினர் என்ற அடிப்படையில் கிரீன்கார்டு பெறுவதற்கான 83 லட்சம் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. வேலைவாய்ப்பு அடிப்படையில் விண்ணப்பிக்கும் சுமார் 4,24,000 பேர் கிரீன் கார்டு பெறுவதற்காக காத்திருந்து இறக்கக்கூடும். இவர்களில் 90 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் இந்தியர்களாக இருப்பார்கள். புதிய வேலைவாய்ப்பு பெற்று கிரீன் கார்டு பெறுவதற்குள் அவர்கள் இறந்துவிடுவார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ேஜா பைடன் நிர்வாகம் மற்றும் இந்திய-அமெரிக்க எம்பிக்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் கிரீன் கார்டு பெறுவதற்கான இந்திய விண்ணப்பதாரர்களின் நிலை நிலையற்றதாகவே உள்ளது.
The post அமெரிக்காவில் கிரீன் கார்டு பெறுவதற்குள் 4 லட்சம் இந்தியர்கள் இறக்கும் அபாயம்?.. ஆய்வில் அதிர்ச்சி தகவல் appeared first on Dinakaran.
