நெடுஞ்சாலைத் துறை மூலம் சென்னை, வளசரவாக்கம் – ராமாபுரம் (வழி) வள்ளுவர் நகர் சாலை சீரமைப்புப் பணி

சென்னை: வளசரவாக்கம் – ராமாபுரம் (வழி) வள்ளுவர் நகர் சாலை வெள்ள நிவாரண திட்டத்தின்கீழ் மழைநீர் வடிகால் வசதி, குடிநீர், கழிவு நீர் இணைப்பு குழாய் பதிக்கும் பணிகள் முடிவுற்றது. தற்போது, இச்சாலையை சீரமைக்கும் பணி நெடுஞ்சாலைத் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகள் விரைவில் முடிக்கப்படும் என நெடுஞ்சாலைத் துறை தெரிவித்துள்ளது.

வளசரவாக்கம் -ராமாபுரம் ( வழி) வள்ளுவர் நகர் சாலை கி மீ 0/0-3/0 சாலையானது திருவள்ளூர் க (ம) ப கோட்டம், அம்பத்தூர் உட் கோட்டம் மற்றும் பூந்தமல்லி பிரிவு சார்ந்த மாவட்ட இதர சாலை (1020) யாதும். இச்சாலையில் 2022-23 வெள்ள நிவாரண பணிகள் மூலம் மழைநீர் வடிகால் திட்டம் முடிக்கப்பட்டது. தற்போது குடிநீர் மற்றும் கழிவு நீர் வாரியம் மூலம் நடைபெற்ற குழாய்கள் பதிக்கும் பணி முடிந்து சாலை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் யாவும் ஒரு வார காலத்திற்குள் முடிக்கப்பட்டு இச்சாலையானது சீரமைக்கப்படும்.

The post நெடுஞ்சாலைத் துறை மூலம் சென்னை, வளசரவாக்கம் – ராமாபுரம் (வழி) வள்ளுவர் நகர் சாலை சீரமைப்புப் பணி appeared first on Dinakaran.

Related Stories: