சின்னமனூர் பகுதியில் விநாயகர் சதுர்த்திக்கு 201 சிலைகள் தயார்

சின்னமனூர், செப். 6: சின்னமனூரில் இந்து முன்னணி சார்பில் 38ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி பெருவிழா வருகிற 18,19,20 ஆகிய 3 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து பொதுமக்கள் பிரதிஷ்டை செய்து வணங்குவதற்கு விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணி தீவிரவாக நடைபெற்று வந்தது. சின்னமனூரில் பகுதியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு மொத்தம் 201 விநாயகர் சிலைகள் தயார் நிலையில் உள்ளன.

இந்த சிலைகள் அனைத்தும் தண்ணீரில் எளிதில் கரையக்கூடியதாகவும், எவ்வித பாதிப்பு ஏற்படுத்த வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகள் தற்போது சின்னமனூர்-உத்தமபாளையம் சாலையில் உள்ள ஒரு தனியார் அரிசி மில்லில் வைக்கப்பட்டுள்ளன. இதற்கான பணிகளில் மதுரை கோட்டச் செயலாளர் கணேசன், மாவட்டச் செயலாளர் சுந்தர் மற்றும் குழுவினர்கள் தீவிரமாக ஏற்பாடு செய்து வருகின்றனர்.

The post சின்னமனூர் பகுதியில் விநாயகர் சதுர்த்திக்கு 201 சிலைகள் தயார் appeared first on Dinakaran.

Related Stories: