ம.பி.யில் ஜன் ஆசிர்வாத யாத்திரை: அமித் ஷா தொடங்கி வைத்தார்

போபால்: மத்தியப்பிரதேசத்தில் ஜன் ஆசிர்வாத யாத்திரையை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தொடங்கி வைத்தார். மத்தியப்பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மக்களை சந்தித்து ஆசிர்வாதம் பெறவும், ஆதரவு திரட்டும் வகையிலும் பாஜ சார்பில் 5 ஜன் ஆசிர்வாத யாத்திரைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதல் ஜன் ஆசிர்வாத யாத்திரையை பாஜ தேசிய தலைவர் ஜேபி நட்டா ஞாயிறன்று கொடி அசைத்து தொடங்கி வைத்தார். நேற்று முன்தினம் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நீமுச்சில் இருந்து மற்றொரு யாத்திரையை தொடங்கி வைத்தார். இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா மண்ட்லா மற்றும் ஷியோபூர் மாவட்டங்களில் ஜன் ஆசிர்வாத் கூட்டத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த யாத்திரைகள் வருகிற 25ம் தேதி போபாலில் முடிவடையும்.

The post ம.பி.யில் ஜன் ஆசிர்வாத யாத்திரை: அமித் ஷா தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: